கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் பல வெளியே வராமல் இருக்கின்றன . அவைகளில் சில இங்கு ,

காலியாகுடி வெங்கட்ராம ஐயர் நடராஜன் (திரு கே. வி. என் ) அவர்கள் என்னுடைய நண்பர் , அவர்களுக்கு கவிஞருடன் மலேசிய சுற்று பயணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு திரு ஆர் எம் வெங்கடாச்சலம் (ஜி . எம் கனரா வங்கி ) மூலம் கிடைத்தது.

அந்த சில நாட்களில் கவிஞர் சொல்ல திரு கே. வி. என் அவர்கள் எழுதி படிவு எடுத்த கவிதைகளும் அதன் முன் பின் நிகழ்வுகளுமே இங்கு.

திரு கே. வி. என் அவர்கள்சேர்த்து பாதுகாத்து வைத்திருந்த முத்துக்களை மாலையாக தொடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இதனால் இறைவன் அந்த மகா கவிஞருடன் எனக்கு ஒரு தொடர்பை தந்துள்ளார் . நன்றி.

அலெக்ஸ் .